சமுர்த்தி உத்தியோகத்தரான இராமன் ராஜாராம் தனது 26 வருட சேவையில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் தான் இறுதியாக 04 வருடங்கள் சேவைசெய்த ஹென்போல்ட் பிரிவில் தன்னுடைய 60ஆவது பிறந்தநாளான இன்று லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் இயங்கும் வினோதயம் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் மற்றும் உணவுகளையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் கிழக்கை பிறப்பிடமாகவும் மலையகத்தில் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியராக கடமைபுரிந்த வரும் ,எழுத்தாளருமான மணிசேகரன் ஆசிரியரும் கலந்துகொண்டார்.
தனது சேவைக்காலத்தில் சிறந்து விளங்கியதோடு அறநெறி மாணவர்களுக்கு உதவிசெய்தமைக்கும் நு /சென்றெகுலர்ஸ் பழையமாணவர்கள் மற்றும் தோட்ட மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இமான்

