பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, பசறை மற்றும் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தற்போதும் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்த இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஹொப்டன் தோட்டம், பழைய தொழிற்சாலை, B பிரிவு, மடுவத்தை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 110 ற்கும் மேற்பட்ட குடும்பங்களினை சேர்ந்தவர்கள் மண் சரிவு அனர்த்தம் காரணமாக தமது சொந்த குடியிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்காலிகமாக ஸ்ரீ விக்ணேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாடசாலை மாணவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களும் பல சுகாதார பிரச்சினைக்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
– சதா



