புஸ்ஸலாவை ஸ்டெலன்பேக் தோட்டத்திற்கு நிகழ்நிலை கற்றல் நிலையம் ஒன்றை உருவாக்குவதில் அத்தோட்ட பொதுமக்கள் பாரிய பங்களிப்பை வழங்கி சாதித்துள்ளனர்.
புஸ்லைவை பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய தோட்டங்களில் ஒன்று ஸ்டெலன்பேக். இப்பிரதேசத்திற்கு அண்மையில் நிகழ்நிலை (Online) கற்றல் நிலையம் ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு இதில் இத்தோட்ட மக்கள் தங்களது உடல் உழைப்பு, சிரமதானம் மற்றும் ஏனைய பல்வேறு பங்களிப்புகளை பல்வேறு முறைகளில் வழங்கி சாதித்து காட்டியுள்ளார்கள்.
இவர்களின் முயற்சியால். அத்தோட்டத்திற்கு நிகழ்நிலை கற்றல் நிலையம் ஒன்று கிடைத்துள்ளது. அந்நிலையம் எதிர்வரும் புதன்கிழமை திறந்து வைக்கப்பவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முன்மாதிரிகளை ஏனைய தோட்டங்களும் பின்பற்றும்போது எமது சமூகம் கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறும்.
இத்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ஆர். ரமேஷ் அவர்கள் பங்களித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




