Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டை சூழ்ந்துள்ள ‘ பொருளாதார நெருக்கடி’ எனும் இருள் அகன்று, இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன் மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
இலங்கை

நாட்டை சூழ்ந்துள்ள ‘ பொருளாதார நெருக்கடி’ எனும் இருள் அகன்று, இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன் மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

ThanaBy ThanaJanuary 15, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

” தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள ‘பொருளாதார நெருக்கடி’ எனும் இருள் அகன்று,  இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன்மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் என உறுதியாக நம்புகின்றேன்.”  – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தைத்திருநாளை முன்னிட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

” இன்றைய நவீன உலகில் சூழல் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசப்படுகின்றது. ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கூட நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்கள்தான் தமிழர்கள். இயற்கை வழிபட்டு, கொண்டாட்டங்களை நடத்தி சுற்றுசுழலை பாதுகாத்தனர்.  இம்முறையும் இயற்கைக்கு நன்றி கூறி, இனிமையாக தைத்திருநாளை கொண்டாடுவோம். விவசாயிகளையும் போற்றுவோம்.

இலங்கைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திருநாள் வழங்க வேண்டும்.  அதற்காக இன்றைய மகத்தான நாளில் இறைவழிபாடுகளில் ஈடுபடுவோம். இஷ்ட தெய்வங்களை வணங்குவோம்.

மலையக தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் தேசிய பொங்கல் விழாவையும் இம்முறை மலையகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் .

மலையகத்தில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும், இல்லங்கள் தோறும் இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும். அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.” – என்றுள்ளது.

ஊடக செயலாளர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.