புசல்லாவை பிரதேச மாணவர்களுக்கு பல்கலைக்கழக பிரவேசம் என்பது ஒரு எட்டாக்கனியாக இருந்த ஒரு காலக்கட்டத்தில் அதனை மாற்றியமைக்கும் நோக்கில் பலமட்ட கலந்துரையாடல்களின் பின்னர் கலைத்துறைக்கு பிரத்தியேகமாக வகுப்பொன்றை ஆரம்பித்து நடத்த தீர்மானிக்கப்பட்டு 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகராதி கல்வியகம் தனது முதல் முயற்சியிலையே மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதில் வெற்றிக்கண்டது. அன்று தொடக்கம் 2021 வரை சுமார் 15 வருட காலம் தனது செயற்பாட்டை இடைவிடாது முன்னெடுத்து வந்ததன் விளைவாக இன்று பல்கலைக்கழக பிரவேசம் என்பது ஒரு சாதாரண விடயமாக மாறியுள்ளது.
வருமான நோக்கற்றவகையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தினூடாக பல மாணவர்கள் இன்று பல்வெறு துறைகளில் உயர்நிலை அடைந்த நிலையில். அதே வேளை இந்த கல்வி நிறுவனம் ஆரம்பித்த காலத்திலையே கல்வியகம் ஒரு குறித்தகாலத்தில் சமூக மாற்றத்துக்கான ஒரு அறக்கட்டளையாக அதில் கல்விக்கற்ற மாணவர்களாளேயே மாற்றியமைக்கப்படும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில். “கல்வியால் சமூகத்தை மாற்றுவோம்” என்ற தொனிப்பொருளுடன். வளர்வோம்,வளர்ப்போம்,வாழ்த்துவோம் என்ற மகுட வாசகத்துடன். தோட்டத்திற்கு ஒரு பட்டதாரி,லயத்திற்கு ஒரு பட்தாரி,வீட்டுக்கு ஒரு பட்டதாரி என்ற தூரநோக்கோடு இயங்கிவந்த கல்வியம். 2024.01.27 அன்று அகராதி அறக்கட்டளை என்று பரிணமித்துள்ளது.
அகராதி கல்வியகத்தில் கல்விக்கற்ற மாணவர்களினாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகராதி மாணவர்கள் கல்விக்கற்று சமூகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்திற்கு வந்து தன்னை சமூகத்தில்
அடையாப்படுத்தி நிலை நிறுத்திக்கொண்ட நிலையில் இத்தகைய முயற்சி இடம் பெற்றுள்ளது. இந்த அகராதி அறக்கட்டளையினூடாக அரசியல்,கல்வி,கலை கலாசாரம்,விளையாட்டு,சமூக நலன், சுயதொழில், தனியாள் முன்னேற்றம், கௌரவிப்பு என பல துறைகளில் சேவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்ட தலைமைத்துவம் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அடுத்தக்கட்டமாக தலைமைத்துவங்கள் மாணவர்களிடம் கைமாற்றப்படவுள்ளது. அதற்கமைய தலைவராக அதிபர் இரா.இராமசீலன், செயலாளராக அதிபர் தே.கணபதி பொருளாளராக விரிவுரையாளர் பெ.இளையராஜா கணக்காளராக அதிபர் செ.சேகர் மற்றும் நலன்புரி சேவை பொறுப்பாளராக ஆசிரியர் சு.தவக்குமார் ஆகியோர் தெரிவு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாம் நிலை தலைவர்களாகவும் துறை சார் பொறுப்பாளர்களாகவும் மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் பரந்துப்பட்ட வகையில் மலையகமெங்கு சேவை செய்யும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட அகராதி அறக்கட்டளையில் ஆரம்பக்கட்ட உறுப்பினர்களாக 2008-2021 வரை கல்விக்கற்ற மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் ஆர்வமுள்ளவர்களையும் உறுப்பினர்களாக இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யோகா
