“சம்பள அதிகரிப்பு தொடர்பில் உரிய பதில் இன்றேல் எமது போராட்டம் தொடரும்” தேரேசியா தோட்டத் தொழிலாளர்கள் குமுறல்
“தமக்கான சம்பள உயர்வு தொடர்பில் உரிய தரப்பினரால் உரிய பதில் கிடைக்காவிட்டால் தொடர்ந்து தமது போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று பொகவந்தலாவ தெரேசியா தோட்டத் தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ தெரேசியா தோட்டத் தொழிலாளர்கள் இன்று (6/2/2024) முன்னெடுத்த
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது
“தோட்டக் கம்பனிகளே தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்து !”
“வாழ்க்கை செலவுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வேண்டும்!”
“அரசாங்கமே தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே!”
“கம்பனிகளே தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்காதே!”
“தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்று!”
“அரசாங்கமே அத்தியாவசிய பொருட்களின் நிலைகளை குறை!”
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியதோடு பாதைகளையும் ஏந்தி இருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்க பேதம் இன்றி கலந்து கொண்டனர்.
