#LRG_உதயம்_நற்பணி_மன்றம்
#HG_Hatharaganga_மூக்குவத்தை
இரத்தினங்கள் புதைந்துள்ள இரத்தினபுரி மாநகரில் ஹப்புகஸ்தன்னை பெருந்தோட்டத்திலுள்ள சிவனொளிபாதமலைக்கான அடர்ந்த காட்டுவழி அடிவாரமான மூக்குத்தை (HG) பிரிவில் அழகிய மலைத்தொடர்கள் சூழவுள்ள பகுதியில் விக்கினங்கள் தீர்க்கும் விநாயகப்பெருமானுக்கு பாதை ஓரத்தில் வழிப்பிள்ளையார் ஆலயம் அமைக்கும் பணிகள் இன்றைய தினம் காலை வேளையில் உள்ள சுப நேரத்தில் பூமி பூஜைகள் இடம்பெற்று மங்களகரமாக அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்புண்ணிய கைங்காரியத்தினை சிறப்பாக நடாத்திட HG ஊர் பொதுமக்களும், அவ்வூர் இளைஞர்களும் முன்னின்று மும்முரமாக செயற்படுகின்றனர்.
அத்துடன் மிகமுக்கிய அம்சமாக இப்பிரிவில் (HG) சமூகசேவை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து LRG உதயம் நற்பணி மன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய சமூகசேவை அமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான முதற்கட்ட கலந்துரையாலும் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இவ்வாலயம் வெகுவிரைவில் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ந்திட ஏற்பாடு செய்ய படவிருக்கின்றது.
