கண்டி தமிழ்ச்சங்கம் பெருமையுடன் வழங்கிய “மலையக மக்களின் இரு நூறு வருட வாழ்வியலும் கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் நூற்றாண்டு நிறைவும்” என்ற தலைப்பின் கீழ் நடாத்தப்பட்ட கட்டுரை மற்றும் சித்திரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 17ம் திகதி இன்று சனிக்கிழமை கண்டி பிரதான தபால் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைவர் டாக்டர் தி பத்மநாதன் அவர்கள் தலைமையில் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலாநிதி எஸ்.கே நவரட்ணராஐா அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியற்பீடம் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர்கள் வர்த்தக பிரமுகர்கள் கல்வியாளர்கள் மாணவர்களும் கலந்துகொண்டனர். அத்தோடு கலைநிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மடுல்கலை நிருபர்






