நீதிமன்ற நடவடிக்கைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நீதிச் சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.சஞ்சீவ சோமரத்ன கடிதம் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை அடிப்படையாகக்கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அதிகாரிகள் அல்லது ஊழியர்களைக்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.