ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கண்டியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளது.
பல்வேறு கோரிக்களை முன்வைத்து குறிப்பாக அரசாங்கம் உறுதியளித்த சம்பள உயர்வு வழங்கப்படாத ஏனைய கொடுப்பனவுகளை வழங்கக்கோரி இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் நுவரெலியா கண்டி மாத்தளை பிரதநிதித்துவப்படுத்தும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டதோடு ஆசிரியர் தொழிற்சங்க செயலாளர் ஜோசப் ஸ்டென்லி அவர்களும் ஏனைய ஆசிரியர் தொழிற்சங்க பிரநிதிகளும் கலந்து கொண்டனர்.
இவ்ஆர்ப்பாட்டமானது கண்டி புகையிரத நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி தலதா வீதி சந்தி வரை சென்று நிறைவடைந்தது.
மடுல்கலை நிருபர்



