புசல்லாவை ‘அறம்’ அறக்கட்டளையின் ஏற்பாட்டில், மெல்போர்ட் தோட்டம் சன் பிளவர் சிறுவர் நிலையத்தில் உள்ள 40 சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மேற்படி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளருமான (நிர்வாகம்) ஐ. ரவிக்குமார் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சிறுவர் நிலையங்களுக்கான உதவித்திட்டங்கள் உட்பட பல சமூக நலத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே அறம் அறக்கட்டளை உதயமாகியுள்ளது.





