மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.24.02.2024.
கடந்த வியாழக்கிழமை முதல் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரியர்கள் மற்றும் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மது, போதை பொருள், போன்ற பொருட்கள் கொண்டு வரும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்த பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க தரிசனம் செய்ய வேண்டி உள்ளது என கூறுகிறார்கள்.
இதனால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


