2024 ஆம் ஆண்டின் தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை உள்ளீர்ப்பு செய்யும் நிகழ்வு தேசிய ரீதியில் இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது.
அதற்கமைய நுவரெலியா கல்வி வலயத்தின் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாணவர் உள்ளீர்ப்பு நிகழ்வானது வித்தியாலய அதிபர் திரு. ந . விஜயகுமாரன் அவர்களின் தலைமையில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமானது.
பாடசாலையில் மேலைத்தேய வாத்திய இசை குழுவின் வரவேற்புடன் புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். நிகழ்வின் விசேட விருந்தினராக நுவரெலியா கல்வி காரியத்தில் இருந்து தொழில்நுட்ப பாட ஆசிரியர் ஆலோசகர் திரு எண்டனி இக்னேசியஸ் கலந்து கொண்டார்.
ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் வரவேற்பு நிகழ்வானது மிகச் சிறப்பாக நடந்தேறியதுடன் நிகழ்வில் பாடசாலையில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
செய்தி – கிரோஷன்














