கௌசல்யா
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராட சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் மூவர் அப்பகுதிக்கு குளிக்கச் சென்ற போது ஒருவர் நீரில் மூழ்கி மரணித்துள்ளார். ஒரு மணி நேரம் பிரதேச மக்கள் குறித்த ஆற்றின் தேடிய பின்னரே இறந்த நிலையில் நீரில் மூழ்கிய சிறுவனின் சடலம் பிரதேச மக்களால் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது மரணித்த சிறுவனின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .
பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக லிந்துலை வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு மரணித்த சிறுவன் தலாவாக்கலை நகரத்தை சேர்ந்த திலிப்ப கமகே என்பது குறிப்பிடத்தக்கது.



