பசறை கமெவெல 4 ம் கட்டை கம்மான பகுதியில் வீடொன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு சுமார் 8.30 மணியளவிலேயே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீட்டில் 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களும் , குறித்த சிறுவர்களின் தாயுமே அவ்வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் குறித்த சிறுவர்களின் தந்தை கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.
மரம் முறிந்து விழும் வேளையில் குறித்த சிறுவர்கள் இருவரையும் உறவினரின் வீட்டில் விட்டுவிட்டு சிறுவர்களின் தாய் தொழும்புவத்தை தேயிலை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற வேளையிலேயே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.
வீடும் வீட்டில் உள்ள பொருட்களும் முற்றாக சேதமடைந்த நிலையில் வீட்டில் எவரும் இல்லாததால் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ராமு தனராஜா
