குவைட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் ஒரு பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் அதிலிருந்து தப்பித்து (09) நாட்டை வந்தடைதுள்ளனர்.
அவர்களுக்கு உணவும், சம்பளமும் வழங்காமல், பலவந்தமாக பணியில் அமர்த்தப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நாட்டுக்கு திரும்பியவர்கள். திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சட்ட விரோத முகவர் ஒருவரின் ஊடாக குவைட் நாட்டிற்கு வெளிநாட்டு வேலைக்காகச் சென்றுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அந்த 6 பேரையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.