Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனங்களுக்கு எதிரான பாரபட்சமும் மலையக தமிழ் தலைமைகளின் இயலாமையும்.
Breaking

மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனங்களுக்கு எதிரான பாரபட்சமும் மலையக தமிழ் தலைமைகளின் இயலாமையும்.

ThanaBy ThanaMarch 2, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 வரையான ஆண்டு காலப்பகுதியில் மலையக தமிழ் பாடசாலைகளில் காணப்பட்ட ஆசிரியர் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டது.

2014/08/08 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக மலையக உதவி ஆசிரியர்களின் நியமனமானது ஆசிரியர் பயிற்சி நெறி அல்லது கல்வி பட்டம் பூர்த்தி செய்யப்பட்டதன் பிறகு ஆசிரியர் சேவை 3 1 (ஆ) பிரிவிற்கு அமைவாக நியமனம் வழங்கப்படும் என குறிபிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இரண்டு வருடங்கள் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்துள்ளதோடு ஆசிரியர் பணிக்கான அனைத்து தகுதிகளும் காணபடுகின்ற போதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் அதிகமான காலம் மலையக ஆசிரியர் உதவியாளர்களின் நியமனமானது புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

 

2015 ஆம் ஆண்டு முதல் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்ற மலையக ஆசிரிய உதவியாளர்கள் வெறுமனே 10,000/= மாதாந்த கொடுப்பனவில் தங்களது ஆசிரியர் சேவையை செய்து வருகின்றனர். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினையில் மலையக ஆசிரிய உதவியாளர்களுக்கு தங்களது அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை காணபடுகிறது. மலையக தூரப் பிரதேசங்களில் சேவை செய்யும் ஆசிரிய உதவியாளர்களின் போக்குவரத்து செலவிற்கு கூட இப்பத்தாயிரம் ரூபாய் போதியதாக இல்லை.

 

ஆசிரிய நியமனத்தினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பலமுறை மத்திய மாகான கல்வி அமைச்சிற்கு சென்ற போதிலும் ஏமாற்றமே எஞ்சியது. மத்தியமாகாண கல்வி அமைச்சானது எமது நியமனத்தை வழங்க (Treasury) இலிருந்து இன்னும் கடிதம் வரவில்லை என கூறி எம்மை புறக்கணித்து வருகின்றனர். நிதி அமைச்சில் இது தொடர்பில் வினவிய போதும் எமக்கான சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எம்மோடு நியமனம் பெற்ற ஊவா, சபரகமுவ மாகாணங்களை சேர்ந்த உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட போதிலும் மத்திய மாகணத்தில் ஆசிரிய உதவியாளர்கள் நியமனத்தில் பாரபட்சமே காணப்படுகிறது.

 

136 மலையக ஆசிரிய உதவியாளர்கள் இந்த நியமனத்தில் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக ஆசிரிய உதவியாளர்களின் நியமனம் வழங்கப்பட்ட போதிலும் இந்த 136 மத்தியமாகாண ஆசிரிய உதவியாளர்களின் நியமணம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த 136 ஆசிரிய உதவியாளர்களின் நியமனம் வழங்கபடாத நிலையில் மேலும் 2500 ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.

 

ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு அமைச்சர்களும் மலையகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியும் பலமுறை இவர்களின் பார்வைக்கு இப் பிரச்சினையினை கொண்டு சென்றும் அவர்களும் பாராமுகமாகவே செயற்பட்டு வருகின்றனர். விசேடமாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர் மலையக பிரதிநிதியாக இருந்தும் இந்த நியமனங்களை பெற்றுகொள்ள முடியாமை இவர்களின் இயலாமையையே காட்டுகின்றது.

 

பலமுறை இவர்களை அணுகியும் இந்த 9 பிரதிநிதிளும் எம்மை புறக்கணித்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் வழங்கப்படும் இவர்களின் வாக்குறுதிகளை போலவே இந்த நியமனங்களும் காணப்படுகின்றன. தங்களின் தேர்தல் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் வெறுமனே ஒரு தோட்ட தொழிலாளர் பெரும் சம்பள அளவினை கூட பெற முடியாமல் மாதாந்தம் 10,000/= ரூபா சம்பளத்த்தை பெற்று சேவை செய்து வரும் அனாதைகளாக்கப்பட்ட இந்த 136 ஆசிரிய உதவியாளர்களுக்கும் எப்போது நியமனம் பெற்றுத் தர போகின்றார்கள்?.

வினோ

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு: புளத்சிங்கள உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

    May 15, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.