மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.04.03.2024.
ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வீதியெங்கும் வழிந்து செல்கின்றது.
இதனால் தனியார் பேருந்து தரிப்பிட பகுதியில் பாரிய அளவில் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த தரிப்பிட பகுதியில் தனியார் பேருந்துகள் அதன் சாரதிகள், நடத்துனர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் என பல்வேறு மக்கள் கூடும் பகுதியாகும்.
இந்த கழிவறை மூலம் நாளாந்தம் பல ஆயிரம் ரூபாய் ஹட்டன் நகர சபைக்கு வருமானம் வந்த வண்ணம் உள்ளது.
இருந்த போதும் இந்த கழிவறை கழிவுநீர் கசிவை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஹட்டன் நகர சபை உள்ளது.
அதன் செயலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



