பலாங்கொடை கல்தொட்ட பிரதான வீதியில் திகதுர பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது பாரிய மரக் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் அந்த பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான பயணிகளை உயிரியலில் காப்பாற்றிய சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
பலாங்கொடையில் இருந்து தென்ன ஊடக கூரஙல பிரதேசம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பேருந்து ஒன்றின் மீது பாரிய மரக் கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளது.ஓட்டுனரின் பாரிய முயற்ச்சியால் எந்த வித ஆபத்தும் ஏற்படாமல் அனைவரும் பாதுகாப்பான முறையில் காப்பாற்றபற்றுள்ளனர்.அத்தோடு பேருந்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு பலாங்கொடை கல்தொட்ட பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
பலாங்கொடை பொலிஸார் பலாங்கொடை நகரசபை மற்றும் பிரதேச மக்கள் ஒன்றினைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பலாங்கொடை போக்குவரத்து சபையில் ஓட்டுநராக கடமை புரியும் ஜகத் குமார என்ற ஓட்டுநரே இவ்வாறு விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றியுள்ளார்.

