Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

August 13, 2026

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

August 13, 2026

முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க.
இலங்கை

தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க.

ThanaBy ThanaMarch 5, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

“பிக்கு கதிகாவத்” சட்டமூலத்தை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விதுர விக்ரமநாயக்க,

கடினமான சூழ்நிலையில் பராமரிக்கப்படும் புனிதத் தலங்களை பாதுகாப்பதற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குவதில் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் தற்பொழுது சரிபார்க்கப்படுகின்றன. 2024 மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த புனிதத் தலங்களுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.

இந்நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு முறையான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அதில் சேர்க்கப்பட்டுள்ள சில விடயங்கல் தொடர்பில் அடிப்படை விதிகளை தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான கருத்துக்களும் ஆலோசனைகளும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

“பிக்கு கதிகாவத்” சட்டத்தைத் தயாரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முன்மொழிவுகளை மகா நாயக்க தேரர்களாலும் சங்க சபைகளாலும் வழங்குமாறு கேட்டுள்ளோம். இது எளிதான காரியம் அல்ல.

ஆனால் பிக்கு ஒழுக்கம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை இதன் மூலம் தீர்க்க முடியும் என்று பெரும்பான்மையானவர்கள் நம்புகிறார்கள். அத்துடன் இலங்கையை தேரவாத சர்வதேச பௌத்த நிலையமாக மாற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை நடைமுறைப்படுத்த அமைச்சு என்ற ரீதியில் நாம் தயாராக உள்ளோம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026

    ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

    August 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.