ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் ஒன்றில் அமைந்துள்ள டிக்கோயா ஸ்ரீ வாணி தமிழ் வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு வரையான தரம் ஐந்து புலமைப் பரிசு பரிசில் மாணவர்களுக்கு
பரிசளிப்புவிழா 03/03/2024 ஞாயிற்றுக்கிழமை
அதிபர் திருமதி. தஜினி தலைமையில்
DKW மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.


அதிபரின் உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்த உப அதிபர்,
ஆசிரியர் குழாம் அவர்களுக்கும், மற்றும்
நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த பிரதம
விருந்தினர்கள் , சிறப்பு விருந்தினர்கள்,
வலயக்கல்வி உத்தியோகத்தர்கள்,
பெற்றோர், மாணவர்கள்,முன்னாள் அதிபர்கள், பாடசாலை
அபிவிருத்தி சங்கத்தினர்,பழையமாணவர்
சங்கத்தினர், நலன் விரும்பிகள் மற்றும் மண்டபத்தை வடிவமைத்த
பெற்றோர்களுக்கும் மனமார்ந்த
நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் புலமை பரிசில் பாடங்களை கற்பித்த ஆசிரியர்களை கெளரவித்து. மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டதையும் இங்கு படங்களில் காணலாம்.

















