தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறியும் விசேட தேடுதல் பிரிவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
தொழிலாளர் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்கள் மீது தாக்கம் செலுத்தும் விடயங்கள் தொடர்பில் தனித் தனியாக கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறியும் விசேட தேடுதல் பிரிவொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பிரச்சனைகளுக்குரிய பதில் கடிதங்களை அனுப்பும் போது தமிழ் மொழியில் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.