செ.திவாகரன் டி.சந்ரு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினை திங்கட்கிழமை (04) ஆம் திகதி இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது. இவ் திருட்ச்சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (05) முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
cp YS 3772 என்ற இலக்கத்தகடு இலக்கத்தைக் கொண்ட டிவிஎஸ் கறுப்பு நிற முச்சக்கர வண்டியினை உரிமையாளர் எரிபொருள் இன்றி தனது வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்ததாக உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டி தொடர்பான தகவல் கிடைத்தால் 0775343893 என்ற இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறு நானுஓயா பொலிஸார் மற்றும் உரிமையாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.