“WIN INTERNATIONAL(PVT) LTD” மற்றும் “KALAARASIGA FOUNDATION” இணைந்து நடாத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை ஒரே நாளில் மேடையேற்றிய பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சியான “கைலேஷ்வரா நாட்டிய அஞ்சலி” நிகழ்ச்சியானது நேற்றைய தினம் (08/03)மகாசிவராத்திரியை முன்னிட்டு வெள்ளவத்தை, மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்ச்சியின் பிரதம அதிதியாகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான பாடலி சம்பிக்க ரணவக்க மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவானது ஒன்பதாவது முறையாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் . இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் பல நடன கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
தினுஷ்கர் பிரேம்குமார்






