கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் எழுதியுள்ள
‘ மலையகம் நிலைமாற்றத்தினை நோக்கி ‘ நூல் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) பசறை நகர பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை சமூக அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்நிகழ்வில் எஸ். புளோரிடா (விரிவுரையாளர் –
கிழக்கு பல்கலைக்கழகம் ) ,
ஆர். புஸ்பகாந்தன் ( விரிவுரையாளர் – வவுனியா பல்கலைக்கழகம்),
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி அதிபர் எஸ்.திருலோகசங்கர், ஊடகவியலாளர் அருள் கார்க்கி,
சர்வமத தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ந.மலர்வேந்தன்












