செ.திவாகரன் டி.சந்ரு
நானுஓயா நு/எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்திற்கு அமெரிக்காவில் இருந்து ஆங்கில ஆசிரியர் வருகை.
பீஸ் கோப்ஸ் நிறுவனமானது பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது இவ் நிறுவனம் ஊடாக 2024 ஆண்டுக்கான புதிய தேர்ச்சிப் பெற்ற அமெரிக்க நாட்டில் இருந்து ஆசிரியர்களை தெரிவு செய்து இலங்கை கல்வி அமைச்சுடன் இணைந்து மத்திய மாகாணத்தில் சில பாடசாலைகளை தெரிவு செய்து மூன்று மாதங்கள் இலங்கையில் மொழி சம்பந்தமான பயிற்சிகள் பெற்ற ஆங்கில பாடநெறிக்காக நானுஓயா நு/எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்திற்கு வழங்கியுள்ளனர். இதன் பிரதான நோக்கமானது மாணவர்களின் ஆங்கில மொழியின் திறன்களை
அதிகரிப்பதற்கும் ஆகும் .
குறித்து அமெரிக்க ஆங்கில ஆசிரியரை வரவேற்கும் வைபவமானது திங்கட்கிழமை (11) பாடசாலையின் அதிபர் ச.வில்வராஜ் அவர்களின் தலைமையில் பிரதி அதிபர் , ஏனைய ஆரியர்களின் நெறிப்படுத்துகையில் சிரேஸ்ட மாணவர்களின் உதவியுடன் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவ் வைபவத்திற்கு நுவரெலியா வலய ஆங்கில கல்வி ஒருங்கிணைப்பாளர் , நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



