மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக மவுஸ்சாக்கலை, கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை, காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 23 அடி குறைந்து உள்ளது.
காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 22 அடி குறைந்து உள்ளது.
இந்த காலநிலை தொடர்ந்தால் இப் பகுதியில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா,மறே ஓயா, சியத்த கங்குல ஓயா, மற்றும் ஏனைய சிற்றாறுகள் கெசல்கமு ஓயா மகாவலி கங்கை அப் பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளில் தற்போது மிக மிக குறைந்த நீர் வரத்து உள்ளது.ஓடைகள் அனைத்தும் வற்றிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.