Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

August 11, 2026

சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

August 11, 2026

குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் புதிதாகநிர்மாணிக்கப்பட்ட தனி வீடுகள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு
Breaking

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் புதிதாகநிர்மாணிக்கப்பட்ட தனி வீடுகள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு

ThanaBy ThanaMarch 14, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று (14.03.2024) வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக ‘முகவரி’ வழங்கப்பட்டு,  வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது.

ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வாழ்ந்துவந்த 24 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு திட்டங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எனினும், முழுமைப்படுத்தப்பட்ட வீடுகளே மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு, குடிநீர், மின்சாரம், வீதி உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்பிரகாரம் முழுமைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டமே இன்று கையளிக்கப்பட்டது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.காவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி. சக்திவேல், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவரும், சட்டதரணியுமான பாரத் அருள்சாமி, உப தலைவர் சச்சிதானந்தன், முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், மக்கள் என பெருமாளனோர்  பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026

    கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு!

    August 11, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026
    Editors Picks

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026

    கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.