மலையகம் 200 மகிழ்வில் மலையக நட்சத்திரக் கலைப் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் புசல்லாவை பொன் .பாலகீருஷ்ணன் எழுதிய “இரதி மதன் நவரத்தின பாடல்களின் தொகுப்பு நூறு” நூல் வெளியீட்டு விழா 2024.03.17 ஆம் திகதி புசல்லாவை இந்து தேசிய கல்லூரியீல் முற்பகல் 10.00 மணிக்கு பேரவையின் தலைவர் மலையக வாசுதேவன் ( M.வாசகம்)தலைமையில் இடம்பெறும்.
பேராசிரியர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
விசேட அதிதியாக முந்நாள் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசாமி இராஜரத்தினம்,அரச கொள்கை ஆய்வாளரும் மனித உரிமை ஆர்வலருமான சத்திவேல் பாலகிருஷ்ணன்
ஆகியோர் இ.தொ.கா.பிரதி பொதுச் செயலாளர் M.S.S.செல்லமுத்து,சமூகத்தொண்டர் தொழிலதிபர் I.V.S.விஜயன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நூலுக்கான வெளியீட்டுரையை கலை ஞர் ஸ்ரீ விக்கிரம கீர்த்தி மருதமுத்து நவநீதன் வழங்குகிறார். நயவுரைகளை ஊடகவியலாளர் ஸ்ரீ விக்கிரம கீர்த்தி துரைசாமி நடராஜா, கவிஞர் ஸ்ரீ விக்கிரம கீர்த்தி சந்தனம் சத்தியநாதன் ஆகியோர் வழங்குகின்றனர்.
களவர்ணனைகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஸ்ரீதேவி கணேஷன்,ஸ்ரீ விக்கிரம கீர்த்தி மாரிமுத்து யோகேஸ்வரன் ஆகியோர் வழங்குகின்றனர்.
கவி வாழ்த்தினை பத்திரிகையாளர் கம்பளை இரா சேகரும் வாழ்த்துரையை ஊடகவியலாளர் முப்புளி மகேஸ்வரனும் வழங்குகின்றனர்.
நன்றியுரையை பேரவையின் பிரதித் தலைவர் அதிபர் ஆறுமுகம் சந்திரமோகன் வழங்குகிறார்.கலை நிகழ்ச்சிகளும் காமன் கூத்துக் காட்சிகளும் களத்தில் மேடையேறுகின்றன.

