2024 மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் செம்பியன் பட்டத்தை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றது.
டெல்லியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கெப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஷாபாய் வெர்மா அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் ஷெரிங்க பட்டேல் 04 விக்கெட்டுக்களையும்,
சோபிமொலினீஸ் 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எல்சி பெரி அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றதுடன், சொபிணி டெவினி 32 ஓட்டங்களையும் அணியின் தலைவி ஸ்மிரிட்டி மந்தான 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதி போட்டியில் வெற்றிபெறாத நிலையில், மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அந்த வெற்றியை பதிவு செய்து கனவை நனவாக்கியுள்ளது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி.
