ராகலையில் இடம்பெற்ற மகளிர் தின விழாவில் தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவியான மியாசி உமயங்கனாவை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கெளரவித்தார். குறித்த மாணவிக்கு பயிற்சி அளித்து வருபவர் டெல்மார் ராகலையை சேர்ந்த ஜப்பான் கராத்தே தோ இதோசுக்காய் சங்கத்தின் மத்திய மாகாணத்திற்கான தலைமை பயிற்றுவிப்பாளர் சென்சே. நாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

