நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட ஹெல்பொட மத்தியப்பிரிவிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க கிள்ளி கொடுத்தாள் அள்ளி கொடுக்க கூடிய பேரருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் பங்குனி மாதம் 21ம் திகதி(வியாழக்கிழமை) மாலை 04.00மணியளவில் ஹெல்பொட மத்தியப்பிரிவு மண்ணின் கலை, கலாசாரங்களை மீட்டெடுக்கும் உன்னத பயணமான மாபெரும் கலைவிழா ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இம்மண்ணின் கலை, கலாசாரங்களை பிரதிப்பலிக்க கூடிய சர்வமதங்களை சேர்ந்த நிகழ்வுகளும், கரகாட்டம், சிலம்பாட்டம், கும்மி ,பரதநாட்டியம் போன்ற இன்னோரன்ன நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுகளில் மூத்த கலைஞர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் மூத்த கலைஞர்கள், முன்னாள் ஆலய பரிபாலன சபையினர், ஆலய புனருத்தாபன குழுவினர், இந்து கலாசார மன்றத்தினர் மற்றும் இன்னோரன்ன சேவையாளர்களை பொன்னாடை போர்த்தி கௌரவ சின்னங்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கும் உன்னத பணியை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிகழ்வுகளில் மூத்த கலைஞர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் மூத்த கலைஞர்கள், முன்னாள் ஆலய பரிபாலன சபையினர், ஆலய புனருத்தாபன குழுவினர், இந்து கலாசார மன்றத்தினர் மற்றும் இன்னோரன்ன சேவையாளர்களை பொன்னாடை போர்த்தி கௌரவ சின்னங்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கும் உன்னத பணியை மேற்கொண்டுள்ளனர்.
தகவல்:
கலாவிபூஷணம் திரு.செல்லதுரை நிமலஸ்பரன் (ஸ்தாபக தலைவர்)
டாக்டர். கலாம் நற்பணி மன்றம்,
ஹெல்பொட மத்தியப்பிரிவு, கட்டுக்கித்துலை

