- மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட *ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலை* பெற்றோர் இன்று குறித்த பாடசாலை அருகில் அதிபருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது இப்பாடசாலை அதிபர் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கரிசனை காட்டுவதில்லையெனவும், மாணவர்களையும், பெற்றோரையும் தகாத வார்த்தைகளில் ஏசுவதாகவும், சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வதாகவும் இதனால் தமது பிள்ளைகளின் கல்வியும், எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் கூறி அதிபரை உடனே இடமாற்றங்கோரி இன்று பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.30மணியளவில் ஆரம்பமான கவனஈர்ர்ப்பு ஆர்ப்பாட்டம் 11.00மணிவரை நடைபெற்றது. இதன்போது பாடசாலைக்கு செல்லும் வழியில் சுலோக அட்டைகளை ஏந்தியும், எதிர்ப்பு கோசங்கள் எழுப்பியும் அமர்ந்திருந்தும் எதிர்ப்பில் ஈடுபட்டனர் பெற்றோர்.