கருவலகஸ்வெவ, சாலியவெவ, சிரிசரவத்த பிரதேசத்தில் பல வருடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தமது 12 வயதுடைய மகள் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் அண்மையில் சாலியவௌ காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவருடன் வீடொன்றில் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
