Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா
கோவில்

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா

ThanaBy ThanaMarch 25, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று  திங்கட்கிழமை (25) நடைபெற்றது.

மத்திய மாகாணத்தில் முதல் சப்ததள 108 அடி பிரமாண்ட இராஜகோபுரத்தையுடைய  பிள்ளையார் ஆலயம் என்ற பெருமையைப் பெறும் இந்த ஆலயத்தில் ஐந்தாவது கும்பாபிஷேக நிகழ்வு இன்று காலை 9.25 மணியளவில் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு மங்கல கணபதி பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, காலை 9.25 முதல் 10.37 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் அடியார்கள் அரோஹரா கூற, விண்ணதிர வேதம் ஓத, மங்கல வாத்தியம் ஒலிக்க, நூதன சப்ததள 108 அடி புதிய இராஜகோபுர ஸ்தூபி விமான அபிஷேகம் மற்றும் கும்ப வீதிப் பிரதட்சணம், மூல ஆலயப் பிரவேசம், ஆவாஹனம், மூர்த்த தானம், மஹா கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டு, தசமங்கல தரிசனம், எஜமான் அபிஷேகம், ஆசிர்வாதம், குருமார் சம்பாவன கெளரவிப்பு, விசேட பூஜைகள் நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் உள்ளிட்ட, பல பிரமுகர்கள், பெருந்திரளான பக்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பசறையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல்

    July 7, 2026
    Editors Picks

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.