முச்சக்கரவண்டியொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரியோரோவ பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
புப்புனிதநீராட்டு விழா ஒன்றிற்கு ஐவர் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை ஜெயசேகெதர சந்திக்கு அருகாமையில் குறித்த முச்சக்கரவண்டி வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
58.65 வயதுடைய இரண்டு ஆண்டுகளும் மூன்று 46.28. வயதுடைய படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.59வயதுடைய பெண் பலியானார்
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா