சமயதீட்சை மற்றும் ஆச்சாரிய அபிஷேக நிகழ்வு வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
தெல்தோட்டை வீசந்தூரமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வு மங்களகரமான சோபகிருது சதுர்த்தி திதியும் விசாக நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய மிதுன லக்கின முகூர்த்தத்தில் வீசுந்தூரமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சாந்தன் குருக்கள் ஜயாவிற்க்கு ஆச்சாரியார் அபிஷேகம் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைப்பெற்றது,
வீசந்தூரமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் விஷே பூஜை வழிப்பாடுகள் இடம் பெற்று நேற்றைய தினம் யாக பூஜை சமய தீக்ஷா ஆச்சாரியா அபிஷேக நிகழ்வு இடம்பெற்று அதன் பின் பட்டம் வழங்கப்பட்டது .
மட்டக்களப்பு சிவஸ்ரீ கண்ணன் குருக்கள் தலைமையில் முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைத்து சாந்தன் குருக்கள் அவருக்கு மத்திய மாகாண வாமதேவ சிவாச்சாரியார் என்ற இங்கு வழங்கப்பட்டது .
இதன் போது ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக சபை செயலாளர் கந்தையா நாகராஜா மற்றும் நந்தகுமார் குருக்களும் அவருக்கு பொண்ணாட் பொத்தி ஞாபக சின்னங்களும் இங்கு வழங்கப்பட்டது .
அதிகமான பக்த அடியார்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .
இந் மங்களகரமான நிகழ்வில் பக்த அடியார்கள் கலந்துகொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுகொள்கின்றனர்,