நுவரெலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் தீ பரவல்.
நுவரெலியா பிரதான நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தீ பரவல் அங்கிருந்த பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா நகரசபை தீயணைப்புப் பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தீ பரவலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளது.
வழக்கம் போல உணவகத்தில் சமையல் வேலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது சமையலறையில் இருந்து புகை மற்றும் வெப்பத்தை அகற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவால் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
