மஸ்கெலியா இஸ்லாமிய பள்ளியின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மஸ்கெலியா (இந்து ஆலயம்) சண்முக நாதர் கோயில் பிரதம குருக்கள், மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத குருவான தப்போவன சுசீத்த மற்றும் சென் ஜோசப் கிறித்தவ சமய ஆண்டகை அவர்களுடன் மஸ்கெலியா நகரில் உள்ள பிரபல வர்த்தகர்கள் அடங்கலாக இஸ்லாமிய பள்ளியின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அவர்களுடன் இணைந்து இஸ்லாமிய பள்ளியின் மௌளவி இஸ்லாமிய நோன்பாளிகள் கலந்து கொண்டனர்.
வெகு சிறப்பாக முறையில் இவ்வருடம் 25 நோம்பினை கொண்டியமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.05.04.2024.
