வழமையாகவே தலவாக்கலை நகரில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளையில் பொருத்தப்பட்டிருக்கும் தன்னியக்க பொறி இயந்திரம் அடிக்கடி செயல் இழந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களிலும் அரச மற்றும் தனியார் துறையினர் சம்பளத்தை பெரும் தினங்களிலும் இவ்வாறான நிலையை காணக்கூடியதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளரை கொண்ட தலவாக்கலை இலங்கை வங்கி கிளையின் செயல்பாடுகள் குறித்து வாடிக்கையாளர்கள் பலரும் தமது விசனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இவங்ககி கிளையில் மூன்று தண்ணியக்க பொறி இயந்திரங்கள் (ATM & CDM) பொருத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு இயந்திரங்கள் அடிக்கடி இவ்வாறு பழுதடைந்த நிலையில் காட்சியளித்து வருகின்றது.. நேற்றும் இன்றும் வங்கியில் உள்ள தண்ணியக்க பொறி இயந்திரம் ஒன்று இயங்காத நிலையில் காணப்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்கும் பணியில் வங்கி நிர்வாகம் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டினையும் வாடிக்கையாளர்கள் முன்வைக்கின்றனர்.
முக்கியமான தினங்களில் பண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்காக தண்ணியக்க பொறி இயந்திரத்தை மாத்திரம் நம்பி வரும் ஏராளமான வாடிக்கையாளர்கள் தமது கருமங்களை முடிப்பதற்காக பல மணித்தியாலங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த வங்கிக் கிளையில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தவை என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில் குறித்த வங்கியின் ஊடாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படும் நிலையில் ஏன் வாடிக்கையாளரின் சேவைகளை தடையின்றி திருப்திகரமாக பெற்றுக் கொள்வதற்கு வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதில்லை என பலரும் கேள்விக்கனை தொடுக்கின்றனர்.
எனவே இவ்வாறு அடிக்கடி பழுதடைந்து வரும் இயந்திரங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய இயந்திரங்களை பொருத்துவதற்கான நடவடிக்கைக தலவாக்கலை இலங்கை வங்கியின் கிளை அல்லது மாவட்டத்தின் பொது முகாமையாளர் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் பலரும் பகிரங்க வேண்டுகோளை விடுகின்றனர்.
கௌசல்யா
