தலவாக்கலை போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொலிரூட் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பிரதேச மக்கள் பொலிசாருக்கு தகவலை வழங்கி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்தலத்திற்கு விரைந்த தலவாக்கலை போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை போலீசார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
