லுணுகல ஹொப்டன் பத்தொன்பதாம் கட்டையைச் சேர்ந்த 16 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
குறித்த இளைஞனின் பிறந்தநாளான இன்று தனது நண்பர்களுடன் பிரதேசத்திலுள்ள நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற வேளையில் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
சடலம் ஹொப்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. லுணுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

