ஹட்டன் அம்மன்நகர் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 23/4/202 செவ்வாய்க்கிழமை சித்திரை மாதப்பௌர்ணமி விரதமும், சித்திரகுப்த நாயனார் விரதமும் கூடிய சுபநாள். காலை முதல் எமது ஆலயத்தில் விஷேட பூஜைகள் நடைபெறும்.
முற்பகல் 11.00மணிக்கு அறநெறி பாடசாலை மாணவர்களின் தேவாரபஜனையை தொடர்ந்து 12.00 மணிக்கு பௌர்ணமி விக்ஷேட பூஜையும், மகேஷ்வர பூஜையும் நடைபெற்று பொதுமக்கள் உபயமாக அன்னதானம் வழங்கப்படும்.
இம்மாத பௌர்ணமி விரதம் செவ்வாய்கிழமை வருவதால் அம்பிகைக்கு உகந்த பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரையான ராகுகால நேரத்தில் திருவிளக்குப் பூஜையை கன்னிப்பெண்களும் சுமங்கலிப் பெண்களும் அம்பிகை ஆலயத்தில் அம்பிகைக்கு முன் செய்வதால் தாங்கள் வேண்டிய வரங்களைப் பெறலாம்.
அன்று சரியாக பிற்பகல் 3.00 மணிக்கு திருவிளக்குப் பூஜை நடைபெறும்
அனைத்து அம்பிகை அடியார்களும் இந்தப்பூஜைகளில் பங்குபற்றி அம்பிகையின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சித்திராபௌர்ணமி அன்னதானத்திற்கு உதவி செய்யவிரும்பும் அம்பிகை அடியார்கள் தாராளமாக உதவி செய்யலாம்.
குறிப்பு.
அடியார்கள் அம்பாளுக்கு பூக்கள் கொண்டுவந்து கொடுக்கவும்.
இந்த
பூஜைகள் யாவும் குறித்த நேரத்தில் நடைபெறும்.
