பசறை நிருபர் 01.05. 2024
விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம் இன்று மு.ப. 10.00 மணிக்கு கந்தேகெதர இந்து கலாசார மண்டபத்தில் காங்கிரஸின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரபல சட்டத்தரணியும் தொழிற்சங்க ஆலோசகருமான எஸ். சத்தியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இக்கூட்டத்தை இப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தோட்டக் கமிட்டி தலைவர்களான ஏ.அருள்தேவன், ஏ. முத்துராஜ் மற்றும் பி. திருச்செல்வம் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
