பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இணைந்த பாடசாலை சமூகத்தின் நிறைவான ஆதரவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி – 2024
பிபிலை கல்வி வலயத்திற்குட்பட்ட மொ/ கொடிகமுவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த வருடாந்த விளையாட்டுப் போட்டி ( 29.04.2024 ) வெகுசிறப்பாக நடைபெற்றது.
அதிபர் எம்.எம்.எம். இர்பான் தலைமையில் நடைபெற்ற விழாவின் முதன்மை விருந்தினராக பிபிலை வலய கல்வி பணிப்பாளர் பிரசாத் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக மத தலைவர்களும், விளையாட்டுத்துறை ஆசிரியர் ஆலோசகர் அமரசிறி, மெதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நட்புறவு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் பங்குபற்றலோடு இனிதே நடைபெற்றது.
மிக நேர்த்தியான விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி ஏற்பாட்டை காணமுடிந்தது.
விளையாட்டுப்போட்டியின் மகத்துவமும் விதிமுறைகளும் துளியளவும்
குறைவில்லாத
மாணவர்களின் உடலியக்கத்திறனை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகள் முறையாக திட்டமிட்டு நடைபெற்றமை பாராட்டுக்குரியவை.
இப்பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களுக்கான பாராட்டும் பரிசளிப்பும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கொடிகமுவ சமூகத்தைச்சேர்ந்த தலைநகர பிரபல வர்த்த பிரமுகர் நூஹூ ஹாஜியார் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான உதவித்தொகையையும் பதங்கங்களையும் வழங்கிவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள்,
பழைய மாணவர்களின் பூரண ஆதரவில்
வெற்றிகரமாக நடைபெற்ற விளையாட்டுப்போட்டி இச்சமூகத்தின் ஒன்றிணைவையும் பாடசாலையின் வளர்ச்சியினையும் பறைசாற்றுகின்ற நிகழ்வாக அமைந்தமை சிறப்பம்சமாகும்.
( ந.மலர்வேந்தன்
நமுனுகுல நிருபர் )












