இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தினுடைய தொழிலாளர் தின நிகழ்வுகள் சங்கத்தின் தலைமை அலுவலகமான தொழிலாளர் இல்லத்தின் முற்றலில், சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் அவர்களுடைய தலைமையில் (01) நடைபெற்றது.
இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் சாகல ரத்னாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் மற்றும் சங்கத்தின் அங்கத்தவர்கள் உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்sவில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினரும் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்
64 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முதல்முறையாக சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தொழிலாளர் தினத்தன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படாவிட்டால் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக நான் அறிவித்திருந்தேன்.அதனைத் தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி அவர்களுடன் நடைபெற்றது இன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் வேதனத்தை 1700 ரூபாயாக அதிகரித்து வர்த்தமானி அறிக்கை வெளியிட்டு உள்ளார் இன்றைய மே தினம் அர்த்தமுள்ள மே தினம் ஆக அமைந்திருக்கின்றது.
மேலும் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமை தொழில் பாதுகாப்பு வழமை மாறாத சம்பள உயர்வு ஆகியவை முறையாக பெருந்தோட்ட தொழிலாளர்களை சென்றடைவதற்கு நாம் முனைப்புடன் செயல்படுவோம்.
இத்தருணத்தில் பெருந்தொட்ட மலையக மக்கள் சார்பில் அதிமேதக ஜனாதிபதி அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என கருத்துரைத்தார்.

