அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் மோர்சன் வனப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு.
05 அன்று காலை 10 மணி அளவில் மோர்சன் தோட்டத்தில் உள்ள சிலர் தங்களின் வீட்டுக்கு விறகு சேகரிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்பிரதேசத்தில் அதிக துர்நாற்றம் வீசியதால் அதனை அவதானித்த ஒருவர் இறந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டதோடு உடனடியாக அவ்விடத்திலிருந்து குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு வந்து பிரதேச மக்களுக்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை அக்கரப்பத்தனை காவல் நிலையத்துக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்த பொலிஸ் அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டனர்.
உடல் உருக்குலைந்து காணப்பட்டதால் இறந்தவர் யாரென அடையாளம் காண முடியவில்லை. சடலம் தற்போது வனப்பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளது .
நீதவான் விசாரணையில் பின்பு சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்
