நு/ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியின் வெற்றிப்பதிவுகளின் நிலைப்புகளில் மகுடத்திற்குரிய இன்றைய நாளின் கதாநாயகிகளான மாணவிகளில் செல்வி ராஜேந்திரன் தனுஷா அண்மையில் வெளியாகவுள்ள இந்திய குறுந்திரைப்படம் ஒன்றிற்கான பதிவு பாடலை பாடியுள்ளதுடன் இன்னும் பல
அல்பம் [பதிவு] பாடல்களை பாடியுள்ளமையும் சிறப்புக்குரியதாகும்.
மேலும் இவ் மாணவி இலங்கையில் இடம்பெறுகின்ற இசை நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கான வாய்ப்பினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் மாணவியான ” செல்வி குருமூர்த்தி சினேகா”
Shakthi Crown இசை நிகழ்ச்சியில் முதலாவது சுற்றில் பாடல் பாடி தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் பாடசாலைக்கும், மலையக சமூகத்திற்கும் பெறுமை சேர்த்துள்ள மாணவிகளை கௌரவப்படுத்தும் நிகழ்வானது 2024/04/29 அன்றைய தினம் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை சிறப்புக்குரியதாகும்.
இவ் மாணவிகள் இசைத்துறையில் இன்னும் பல வெற்றிகளை பெறுவதற்காக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
கவியுகன்