படல்கும்புரவில் இருந்து பதுளை நோக்கி கொண்டு சென்ற
அனுமதியின்றி தேக்கு பலகைகளை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக லோரியுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (08) கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 மற்றும் 27 வயதுடைய படல்கும்புர பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன ஏகநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய படல்கும்புர பசறை வீதியின் தோலபோவத்த பகுதியில் வைத்து லோரியை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போது 548 அடி தேக்கு பலகைகளை சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லும் போது கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பதுளை பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் சில்வா ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பசறை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
