“VERITE RESEARCH” இன் 15 அமைச்சுகளை மட்டும் கொண்ட ஒரு பகுத்தறிவாய்ந்த அரசாங்க கட்டமைப்பு தொடர்பாக முன்மொழியப்பட்ட திட்ட வரைபடம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (09.05.2024) கொழும்பு, இலங்கை பத்திரிக்கை ஸ்தானத்தில் இடம் பெற்றது.
இதன் போது வெரிட்டே ரிசர்ச் ஒரு நெறிப்படுத்தப்பட்ட நிர்வாக நோக்கத்துடன், ஒரு வினைத்திறமிக்க அரசாங்க கட்டமைப்பிற்கான ஒரு வார்ப்புருவை முன்வைத்தது.
இது 15 அமைச்சுகளைக் கொண்ட அரசாங்க கட்டமைப்பை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதைக் காட்டும் ஒரு அதி விசேட வர்த்தமானியின் வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ் ஆவணம் செயல்படுத்தப்பட வேண்டிய கடமைகள், பணிகள், நிறுவனங்கள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடபட்டது.
இந் நிகழ்வில் பல பத்திரிக்கையாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
-டினுஷ்கர் பிரேம்குமார்

